(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

ராகம கொள்ளை: ஐந்துபேர் கைது

ராகம பெஸ்லிக்கா பாடசாலைக்கு அண்மையில், ஜூன் மாதம் 26ஆம் திகதியன்று இடம்பெற்ற 77 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையோர் என்று கூறப்படும் 5 பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


ஆயுதங்களுடனேயே இவர்கள், கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர், இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும் மற்று​மொரு, அந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆடைவர்த்தக நிலையத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் என்றும், ஏனைய இருவரும் பல்வேறான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அந்த பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 40 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாய், ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டு, அந்த துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் -56, ரி-56 ​ரவைக்கான மெகஷீன்கள் இரண்டு, அலைபேசிகள் 8 உள்ளிட்டவை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​அவர்கள் ஐவரையும் மஹர நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (03) ஆஜர்படுத்திய போது, அவர்களை 48 மணிநேரம் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை