(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

காலையில் மீண்டும் பதற்றம் -வடமராட்சியில் வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டு காவல்துறைக்கு எதிர்ப்பு

மணல்காட்டில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலையில் பருத்தித்துறை- கொடிகாமம் வீதியில் ரயர்கள் கொளுத்தப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.


வடமராட்சியில் உள்ள துன்னாலைக்கும் கலிகைச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளன.

இதனால், பருத்தித்துறை- கொடிகாமம் வீதி ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. அத்துடன் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன் துன்னாலையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



படம்- உதயன்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை