(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

ஜனாதிபதி, பிரதமரை இன்று சந்திக்கவுள்ளார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் !

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை இன்று சந்திக்கவுள்ளார்.


ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் நேற்று (19) பிற்பகல் நாட்டை வந்தடைந்தார்.

ஜூலி பிஷப், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நேற்று மாலை கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதே அவரது இலங்கைக்கான விஜயத்தின் நோக்கமெனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை