(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியது எப்படி? இலங்கை வீரர் லக்சன்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி அங்கு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.


இதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வேயும், நேற்று நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றது.

இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இப்போட்டியில் இலங்கை அணியின் Lakshan Sandakan நான்கு விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர்.

இதைத் தொடர்ந்து அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இப்போட்டியில் நான்கு விக்கெட் வீழ்த்தியது எப்படி என்று Lakshan Sandakan கூறுகையில், இப்போட்டி துவங்குவதற்கு முன்னர் சில திட்டங்கள் வைத்திருந்தேன். அதை செயல்படுத்தினேன்.

பந்தை நேராகவும், மெதுவாகவும் வீசினேன். அதற்கு ஏற்ற வகையில் பீல்டிங் வியூகங்களை வகுத்தேன். பந்தை மெதுவாக வீசும் போது அதன் லென்த் ஆனது மாறுபடும்.

ஒரு போட்டியில் லென்த் மற்றும் பேஸ் மிகவும் முக்கியம். அது அன்றைய போட்டியில் எனக்கு சரியாக அமைந்தது. அதனால் விக்கெட்டுகள் வீழ்த்த முடிந்தது என கூறியுள்ளார்.

மேலும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய Wanindu Hasaranga பற்றி கூறுகையில், அறிமுக போட்டியில் எந்த ஒரு வீரராக இருந்தாலும், சிறிய அளவிலான அழுத்தம் இருக்கும்.

ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் Wanindu Hasaranga சிறப்பான முறையில் googlie வீசி விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்று அவரை புகழ்ந்து பேசினார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை