(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

தினம் ஒரு அத்திப்பழம்.. காலையில் மட்டும் சாப்பிடுங்கள்

அத்திப்பழத்தில் கால்சியம், விட்டமின் C, இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.

அதிலும் உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் காலையில் ஒன்று சாப்பிட்டு வந்தால், எண்ணற்ற மருத்துவ பலன்களைப் பெறலாம்.
அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்?
  • உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இது எலும்புகளை வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
  • அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் சர்க்கரை அதிகம் என்பதால், மருத்துவரின் கேட்டு சாப்பிடலாம்.
  • தினமும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் சோடியம் உள்ளதால், அது ரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுப்பதுடன், ரத்தசோகை பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • அத்திப்பழத்தில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், அது ப்ரீ-ராடிக்கல்களின் மூலம் டி.என்.ஏ பாதிப்படைவது தடுத்து, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
  • அத்திப்பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால், அது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
  • அத்திப்பழம் பாலுணர்வைத் தூண்டும் தன்மையைக் கொண்டதால், அது கருவுறும் திறன் மற்றும் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால், இதய நோய் ஏற்படும் அபாயம் குறைவதுடன், அழகான மற்றும் மென்மையான சருமத்தை பெற உதவுகிறது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை