(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

கதிர்காமக்கந்தன் மற்றும் உகந்தமலை முருகனின் கொடியேற்றம் !

வரலாற்று சிறப்பு மிக்க இரு பெரும் முருகன் ஆலயங்களான கதிர்காமக்கந்தன் ஆலயம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயம் ஆகிய இரண்டு ஆலயங்களின் கொடியேற்றமும், தீர்த்தோற்சவமும் இம்முறை வெவ்வேறு தினங்களில் இடம்பெறவுள்ளது.


கதிர்காமக் கந்தனாலயத்தின் கொடியேற்றம் 23ஆம் திகதியும் உகந்தமலை முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் எதிர்வரும் 24ம் திகதியும் இடம்பெறவிருக்கின்றது.

உகந்தமலை முருகனாலய தீர்த்தோற்சவம் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதியும் கதிர்காம தீர்த்தோற்சவம் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதியும் இடம்பெறவிருக்கின்றது.

இந்நிலையில் கதிர்காம பாதயாத்திரிகள் செல்வதற்கான காட்டுப்பாதை நாளை திறக்கப்பட்டு மீண்டும் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி மீளடைக்கப்படும்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் மாத்திரம் தான் பாதயாத்திரிகர்கள் காட்டுப்பாதையால் பயணிக்க முடியும்.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை