(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

விஜேதாச குறித்த முறைப்பாடுகளைப் பரிந்துரைக்க விசேட குழு !

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை குறித்த பதவியில் தொடர்ந்தும் வைத்திருப்பதா? இல்லையா? என்பது குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு விசேட குழுவொன்றை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.


ஐ.தே.க.யின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று (17) நடைபெற்ற நிவேற்றுக் குழுக் கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் பெறப்பட்டதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஓரிரு தினங்களில் பிரதமரினால் இக்குழு அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை