(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

சிங்கள மாணவர்களின் முற்றுகைக்குள் கிழக்கு பல்கலைக்கழகம்

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் அட்டகாசம் செய்தாகத் தெரிவித்து ஊழியர்கள் தொடர்ச்சியான பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை மாணவர்கள் மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்தின் நிருவாகக்கட்டத்தை ஆக்கிரமித்துள்ளதனால் உப வேந்தர் கடந்த புதன்கிழமை முதல் அவரது காரியாலயத்திலிருந்து வெளியேற முடியாமல் அங்கேயே தங்கியுள்ளார்.

மூவேளை உணவுகளும் வெளியிலிருந்து அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊழியர்களது பணிப்பகிஷ்ப்பினால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு -வந்தாறுமூலை, சுவாமி விபுலானந்தா இசை நடனக்கல்லூரி மற்றும் திருகோணமலை ஆகிய வளாகங்களின் நிருவாகம் மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடரமுடியாத நிலையிலுள்ளன.

மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்தில் எதிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் கடந்த புதன்கிழமையன்று பாதுகாப்புக்கடமையிலிருந்த உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியுள்ளனர்

 இவரைத்தாக்கிய மாணவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனக்கோரியே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை