(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் புதிய திருத்தச் சட்டமூலம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான புதிய திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
 
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தாமதமடைகின்றமை தொடர்பில் ஜனாதிபதிக்கோ, அரசாங்கத்திற்கோ குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் எந்த நியாயமும் கிடையாது. 2012ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் 55 கோளாறுகள் காணப்பட்டன என்றும் அவர் கூறினார்.
               
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது நிறைவாண்டை கோலாகலமான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் அடுத்த மாதம் 2ஆம் திகதி கொழும்பு கெம்பல் மைதானத்தில் நிகழ்வு நடைபெறவுள்ளதாக  கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை