(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

விஜயகலாவை கைது செய்ய ஆர்ப்பாட்டம் !

வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் (25) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.



இவ்வார்ப்பாட்டம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டோர் “ இதுவா நல்லாட்சி ” , “ நீதியரசர் இளஞ்செழியனை சுட முயன்றவரை்களை கைதுசெய் ” , “ விஜயகலாவை கைது செய் ” போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஆர்ப்பாட்டக்கார்களால் மகஜர் ஒன்றும் ஐ.நா.அலுவலக அரிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணி குறித்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை