(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

கொழும்பு நகரில் பஸ்களுக்கு வாகன நிரல் முன்னுரிமை (The Priority System Track)

கொழும்பு நகர வீதிகளில் வாகன நிரல் முன்னுரிமை அடிப்படையில் பஸ்களுக்கான முன்னுரிமை தொடர்பான செயற்பாடு எதிர்வரும் 15ம் திகதி முதல் நடைமுறைப்படத்தப்படவுள்ளதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக மொறட்டுவ சந்தியிலிருந்து கட்டுபத்த வரையிலும், சவோய் சினிமா மண்டபத்திலிருந்து பம்பலப்பிட்டி சந்தி வரையிலும் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கட்டுபத்த சந்தியிலிருந்து மலிபன் சந்தியவரையிலும், பம்பலப்பிட்டி சந்தியிலிருந்து பித்தளை சந்தி வரையிலும் முன்னுரிமை நிரல் அடிப்படையில் (The Priority System Track) எதிர்வரும் 22ம் திகதியிலிருந்து ஆரம்பமாகின்றது.

ஏனைய கொழும்பு வீதிகளிலும் இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை