(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

இன்று கண்டன ஆர்ப்பாட்டம் !!!!!

“ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைய தலைமையகத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் (ம.தி.மு.க) பொதுச்செயலாளர் வைகோ மீது தாக்குதல் நடத்த கைக்கூலிகளை ஏவிவிட்ட இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு ம.தி.மு.க. இன்று (27) காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளது” என, அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அறிவித்துள்ளார்.


இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில், நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில், மனித உரிமை ஆணையத்தின் 36 ஆவது அமர்வு, செப்டெம்பர் 11 ஆம் திகதி ஆரம்பமாகி 29 ஆம் திகதி வரையிலும் நடைபெறுகிறது.

“இந்த அமர்வில் பங்கேற்க பொதுச்செயலாளர் வைகோ, செப்டெம்பர் 17ஆம் திகதியன்று,ஜெனீவா சென்றடைந்தார். செப்டெம்பர் 18ஆம் திகதியன்று, ஈழத்தமிழர்கள் ஜெனீவாவில் நடத்திய பிரம்மாண்டமான பேரணியில் வைகோ உரையாற்றினார்.

“அதனைத் தொடர்ந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 36 ஆவது அமர்வில் செப்டெம்பர் 18 ஆம் திகதி உரையாற்றிய வைகோ, படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் சோக வரலாற்றை எடுத்துரைத்தார்.
 
“இந்நிலையில்தான் செப்டெம்பர் 25 ஆம் திகதி, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் முதன்மை அரங்கில் நடந்த கூட்டத்தில் வைகோ உரையாற்றிவிட்டு வந்த நேரத்தில் இலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஆறேழு பேர், வைகோவைச் சூழ்ந்துகொண்டனர். அதில் ஒரு பெண்மணி, ‘இலங்கைப் பிரஜை அல்லாத நீ எப்படி இலங்கையைப் பற்றிப் பேசலாம்?’ என்று கேட்டார்.

இதேவேளை, வைகோ மீதும் தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளனர். அந்த முயற்சியை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது” என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை