(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

ஐநா பொதுச் செயலாளர் இலங்கைக்கு வந்து ஆராய வேண்டும்.வைகோ கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் இலங்கைக்கு சென்று நேரில் நிலைமையைக் கண்டறிய வேண்டும் என, வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். 


ஜெனீவாவில் இருந்து சென்னை திரும்பிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத்தில் பங்கேற்று சென்னை திரும்பிய வைகோ, விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறியதாவது, 

ஜெனீவா பயணம் பயனுள்ளதாக அமைந்ததற்கு உதவிய அனைத்து தமிழ் ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு நன்றி தெரித்துக்கொள்கிறேன். 

கடந்த 16 ஆண்டில் 4 முறை சுவிட்சர்லாந்து செல்ல விசா மறுக்கப்பட்ட நிலையில், தற்போது தான் ஜெனீவா செல்ல வாய்ப்பு கிடைத்தது. 

ஜெனீவா நடந்த மனித உரிமை ஆணையகக் கூட்டத்தில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினேன். 

மேலும், ஐ.நா பொதுச் செயலர் இலங்கை சென்று நேரில் நிலைமையைக் கண்டறிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன், எனக் குறிப்பிட்டார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை