Post views-

வடக்கில் வெள்ளம் - புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.

யாழ்ப்பாணம் வடக்கு பிரதேசத்தில் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக பல இடங்களிலுள்ள வீதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஆகக்கூடிய மழைவீழ்ச்சி முல்லைத்தீவு மற்றும் வவுனியா பிரதேசங்களில் பதிவாகியுள்ளது.

சிறிய குளங்களில் நீர் நிரம்பியுள்ளதனால் வெள்ளம் ஏற்பட்டுள்ளாதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தென் இலங்கை மற்றும் அதனை அடுத்துள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் எதிர்வரும் 2 நாட்களுக்கு கடும் மழைபெய்யக்கூடும் என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதியில் குறைந்த தாழ்வு பகுதி இடம்பெற்றிருந்தது. இது மேற்குநோக்கி நகர்ந்து தற்பொழுது தென்இலங்கை மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக இரு நாட்களுக்கு தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் , வடதமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி எதிர்வரும் 48 மணிநேரங்களில் தென்கிழக்கு அரபிக்கடல் அதை அடுத்துள்ள லட்சத்தீவுப்பகுதிக்கு செல்ல வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு வங்கக்கடலில் எதிர்வரும் 29ஆம் திகதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

Read 10 times

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    தாயக நேரலை கார்த்திகை 26 - 27

    தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை

    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை