Post views-

திருகோணமலையில் கடும் மழை !

திருகோணமலை மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின் ஏற்பட்ட கடும் மழை காரணமாக, தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இம் மாவட்டத்தின் கந்தளாய், முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக வடிகான்களில் நீர் வழிந்தோடுவதோடு, வீதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
அத்துடன், கந்தளாய், வென்ராசன், பனிச்சம்குளம் மற்றும் வான்எல போன்ற குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது.
கந்தளாய் மற்றும் முள்ளிப்பொத்தானை போன்ற கிராமப்புர பகுதிகளில் உள்ள வயல் நிலங்களும் மழை நீரில் மூழ்கி காணப்படுகின்றது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    தாயக நேரலை கார்த்திகை 26 - 27

    தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை

    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை