(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவா் மா்மமான முறையில் மரணம்!

வவுனியா மருக்காரம்பளை கணேசபுரம் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தா் ஒருவா் நஞ்சருந்திய நிலையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்றையதினம்(21) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடா்பில் தெரியவருவதாவது.....

இந்த இளைஞன் நேற்று இரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் திடீரென தன் தந்தையை அழைத்து தான் விஷம் அருந்தியுள்ளதாக கூறியுள்ளாா்.

இதனையடுத்து உடனடியாக இந்த இளைஞனை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனா்.

எனினும் இந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியா மருக்காரம்பளை கணேசபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சிவகுமார் கஜந்தன் என்கின்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு  மரணமடைந்தவராகும்.

இவருடைய மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    மின்னஞ்சலில் செய்திகளை பெற

    அதிகம் வாசிக்கப்பட்டவை